அவளின் நாணம்

களிப்பூட்டும் தென்றல்

அரவணைக்கும் மலைச்சாரல்
சுகமான மாலைப்பொழுது
வியப்பூட்டும் மலைப்பயணம்
களைப்பாற்றும் பறவையின் குரல்
முகவரியற்ற இன்பம் அனைத்தையும்
வீழ்த்திடுமே அவளின் நாணம்!

எழுதியவர் : கவின்குமார் (19-Sep-19, 1:38 pm)
சேர்த்தது : கவின்குமார்
பார்வை : 64

மேலே