உன் ஞாபகங்கள்

ரோஜா இதழ்கள் அவிழ்ந்து
நிலம் வீழ்ந்தது போன்று
ஒழித்து வைத்த முத்துக்கள்
சிந்தித் சிதறியது போன்று
புன்னகை உதித்துச் சென்றாய்
வண்டு வந்து உள்ளே புகுந்து
உதிரம் தசை கீறிக் கிழித்தது
போல் அனுதினமும் உறுத்தி
எடுக்குதே உன் ஞாபகங்கள்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Sep-19, 2:24 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : un gnabagangal
பார்வை : 455

மேலே