வாழ்க்கையை கற்று கொடுத்த செடி

வாழ்க்கையை கற்று கொடுத்த செடி

பெரும் சூறை காற்று !
என் வாழ்விலும்,
வெளியிலும் !
இனி என் வாழ்க்கை
அவ்வளவுதான் ! நினைத்தவன்
எதிரில்
சல்லி வேருடன்
சாய்ந்து விட்ட செடி
இன்னும் கொஞ்சம்
உயிர் பிடித்து நிறுத்தி
வைத்தது ஆணி வேர்
எங்களால் முடியவில்லை
முணங்களுடன் காய்த்து
தொங்கும் பூ, காய்கள் !
தண்டை மடக்கி
தரையில் ஊண்
அறிவுரை சொன்னது
சல்லி
தண்டை வளைத்து
தரையில் வைக்க
இரண்டே நாளில்
தண்டில் முளைத்து
மண்ணை பிடித்தது சல்லி

முழங்கால் ஊன்றி
எழுநது நிமிர்ந்த செடி..!

நானும் எழுந்து
நிற்க தயாரானேன் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Sep-19, 9:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 232

மேலே