நியூ வாரியர்ஸ் NEW WARRIORS

வைரத்தின் மறுபக்கம் நீங்கள்
வைராக்யத்தின் மொழிபெயர்ப்பும் நீங்கள்
வரலாறு படைப்பதற்க்கே உருவானவர் நீங்கள்
வள்ளுவன் எழுதிய எழுதுகோளின் கூர் பகுதிதான் நீங்கள்
பசுமை நிறைந்த இதயம்தான் நீங்கள்
பாசத்தை பட்டுவாடா செய்யும் நேச வங்கிதான் நீங்கள்
சமத்துவம் பேசிடும் ஐ நா வும் நீங்கள்
சத்ரபதி வீர சிவாஜியின் போர் வாள்தான் நீங்கள்புதுக்குளம் சுற்றும் புறாக்கள் தான் நீங்கள்
புல்வெளியில் பட்டு வெண்மை ஒளி திரட்டும் பனித்துளிதான் நீங்கள்
மல்லிகை பூவின் மகரந்த வழிப்பாதை நீங்கள்
இன்பங்களை சுமந்து மெதுவாய் நடக்கும் நத்தைகள்தான் நீங்கள்
துன்பங்களை விரட்ட துள்ளி குதிக்கும் புள்ளி மான்கள்தான் நீங்கள்
சிரிப்பின் இதழ்களோடு எல்லோரையும் சிறப்புடன் வரவேற்று
மதிப்பின் பண்புகளாய் மாதுளை முத்துபோல் இனிமை தரும்

எஸ்.பி.பட்டினத்தின் போர் வீரர்களே
வாழ்க வளமுடன்...

BY ABCK

எழுதியவர் : (20-Sep-19, 11:45 am)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 19

மேலே