காதல்

பூவிற்கு அழகு
அதன் மொட்டவிழ
இதழ்கள் விரிய
இதழ்கள் தரும் வாசம்
இதழ்களின் வண்ணம்
பெண்ணே உந்தன் அழகு
மலர்ந்த உன் சிவந்த முகத்தில்
அதில் சிவந்து விரிந்த
செவ்விதழ்களில்
பூவின் இதயத்தில் மகரந்தம்
அதை நாடி வரும் கரு வண்டு
தேன் உண்டுமயங்கி
பூவின் இதழ்களில் உறங்கும்
பூவின் காதலன் வண்டு
பெண்ணே உந்தன் இதழ்களின் ஓரம்
தேன் சிந்த அதை உண்டு களிக்க
வந்த வண்டு நான் உந்தன் காதலன்
எனக்கு உன் இதயத்தில் இடம் தருவாயா
அதில் ஊரும் காதலாம் உன் அன்பில்
நான் நித்தியம் வாசம் செய்ய ஆயுள் உள்ள வரை
மலரே, இப்படிக்கு உன் காதலுக்கு எங்கும்
இந்த கரு வண்டின் விண்ணப்பம் இது
ஏற்றுக்கொள்வாயா என்னை வாழவைப்பாயா

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (20-Sep-19, 12:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 55

மேலே