வானிலை அறிக்கை வாசிப்பது மருதம்மா

பார்க்குமிடமெல்லாம் உன் பச்சை நிறம் தோன்றுதடா
என்று இபோதெல்லாம் பாரதி போல் பாடிட முடியுமா ?
பார்க்குமிடமெல்லாம் வெட்டவெளியாய் காட்சி அளிக்குதடா
என்றுதான் பாடிட முடியும்
கொண்டல்கள் முழவினேங்க என்று கம்பனைப் போல்
பாடிட முடியுமா
NO THUNDER NO SHOWER என்று வானிலை அறிக்கைதான்
வாசிக்க முடியும்
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றான்
பழந்தமிழன்
கனவில்லமும் கட்டிடமும் சார்ந்த இடமும் மருதம்
என்று மாற்றி அமைத்தான் புதுத் தமிழன்

முல்லை திரிந்தால் பாலை
மருதம் திரிந்தால் கனவில்லாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-19, 7:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே