சினிமா சினிமா

பிரகாஷ் டைனிங் டேபிளில் அமர்ந்து மனைவியின் கைவண்ணத்தை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான், "சாம்பார் சாம்பார் மாதிரியே செஞ்சிருக்க, வாவ்"


"இல்லாட்டி அது சாம்பார் இல்லையெங்க"

இடது கை போனில் வாட்ஸாப் நகர்த்த, வலது கை இட்லியைப் பிட்டு சாம்பாரில் பிசைந்து வாய்க்கு கூரியர் செய்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில்... "பிரேமி... காஃபில உப்பு இல்ல..." என்றான்

"என்னது..."

"ஐ மீன்... காஃபில இனிப்பு இல்ல... சூடும் இல்ல... சப்பு ன்னு இருக்கு..."

"நான் டேபிள்ள காஃபியே வைக்கலியே..."

"வைக்கலியா..." மொபைல் போனிலிருந்து கவனத்தை குவளைக்குத் திருப்பினான் அது தண்ணீர்க் குவளை, அப்போதுதான் புரிந்தது தான் அருந்தியது தண்ணீர் என்று, "ஹே... சாரி... தண்ணியில சுகர் இல்ல..."

அடுப்படிவிட்டு வெளியில் வந்த பிரேமி, "அன்பான கணவரே... என்ன ஆச்சு இன்னிக்கு... காஃபில உப்பு இல்லங்கறீங்க... தண்ணில சுகர் இல்லங்கறீங்க...


"எல்லாம் இந்த வாட்சாப்ப்பால வந்தது... ஓ.கே.

எழுதியவர் : மீ.மணிகண்டன் (21-Sep-19, 6:55 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : sinimaa sinimaa
பார்வை : 333

மேலே