சிமி - உமி

அய்யா சோசியரய்யா நான் பீகார்ல

வேலை பாக்கிறேன். மனைவி

பிரசவத்துக்கு அவளோட அம்மா வீட்டுக்கு

அனுப்பி வச்சேன் போன மாசமே. மூணு

நாளைக்கு முன்னாடி என் மனைவிக்கு

இரட்டைக் குழந்தைங்க பொறந்திருக்குது.

அதான் உங்களப் பாக்க வந்தேன்.
@#@@@@#@
இந்த சோதிடர் இஷ்டலிங்கத்தைத் தேடி

வர்றவங்க குழந்தைங்களுக்கு ராசியான

பேருங்கள வைக்கச் சொல்லி

என்னைத் தேடித்தான் வருவாங்க.

நீங்களும் அதுக்குத்தானே வந்தீங்க?

@####@@@
உங்களப் பத்தி வெளிநாட்டில வாழற

தமிழர்களுக்குக்கூட தெரிஞ்சுருக்கு.
######
ஆமாம் தம்பி. அவுங்க என்னோட வங்கிக்

கணக்கில பணம் செலுத்தி

இணையவழியாக விவரத்தைச்

சொல்லுவாங்க. எங்க அலுவலக கணில

ஒரு லட்சம் பேருங்கள பதிவு பண்ணி

வச்சிருக்கிறோம். அதிலிருந்து

பேருஙாகள தேடி எடுத்து அவுங்க தந்த

விவரத்துக்கு தகுந்த பேருங்கள

மின்னஞ்சல் வழியா அனுப்பிடுவோம். சரி

உங்கள் தேவையைச் சொல்லுங்க.
@######
இரட்டைக் குழந்தைகள்ல ஒண்

பையன். இன்னொன்னு பொண்ணு.

அவுங்களுக்கு வைக்கிற பேருங்க இரண்டு

எழுத்துப் பேருங்களா

இருக்கணும்..இரண்டாவது எழுத்து

இரண்டு பேருங்களுக்கும் ஒரே எழுத்தா

இருக்கணும்.
##@@##
என்னுடைய அலுவலகத்தில மொத்தம்

முப்பது பேரு வேலை பாக்கறாங்க.

இந்திய மொழிகள் வெளிநாட்டு

மொழிகள்ல பேருங்க, பேருங்களோட

அர்த்தம் ஆகியவற்றைக் கண்டுபிடிச்ச

கணினில பதிவு செய்யறதுதான் அவுங்க

வேலை. அந்த முப்பதாவது நபர் பெயர்

ஆராய்ச்சில பிஎச்.டி பட்டம் வாங்கினவர்.

நாம பேசினது எல்லாம் பக்கத்து

அறையில இருக்கிற அந்த சிறப்பு பெயர்

நிபுணர் காதில தெளிவாக கேக்கற மாதிரி

ஏற்பாடு பண்ணிருக்கிறேன். நீங்க கேட்ட

பேருங்களுக்கு மொத்தம் இருபதாயிரம்

ரூபாய் கட்டணம். நீங்க ஏடிஎம் அட்டை

வச்சிருக்கிறீங்களா?
@@@@
கொண்டு வந்திருக்கறங்க அய்யா.

@@@@@
பத்தாவது அறையில காசாளர் இருப்பாரு.

அங்க போயி பணத்தைக் கட்டீட்டு ரசிது

வாங்கிட்டு வாங்க. நீங்க பணத்தைச்

செலுத்திய அடுத்த நிமிடமே நீங்க

ஆசைப்பட்ட மாதிரி பேருங்க அச்சாகி

என்னோட மேசைக்கு வரும். சரி சீக்கிரம்

வாங்க. நான் நீங்க வர்றபோது பேருங்க

அச்சாகியுள்ள தாளை உங்க கையில

தருவேன்.
@@@@@
(பெயர் கேட்டு வந்தவர் ஐந்து நிமிடம் கழித்து வருகிறார்)

இந்தாங்க அய்யா ரசீது.

@@#@
சரி. நான் பேருங்களப் படிச்சுக் காட்டிட்டு,

பெயர்கள் அச்சிட்ட தாளை உங்க கையில

தர்றேன். பொண்ணுப் பேரு 'சிமி'. பையன்

பேரு 'உமி'.
@@@#@

அடடா. அருமையான பேருங்க அய்யா.

@@@@@@
சரி உங்க மின்னஞ்சல் முகவரியை பெயர்

சிறப்பு நிபுணர்கிட்ட குடுத்துட்டுப் போங்க.

இன்னும் ரண்டு நாள்ல குழந்தைங்க

பேருங்களுக்கான அர்த்தம் சாதக்குறிப்பு

எல்லாம் மின்னஞ்சல அனுப்பி

வைப்போம். உங்கப் பேரை இன்னொரு

தடவை சொல்லுங்க.

@@###
எம் பேரு சுயம்புலிங்கமுங்க அய்யா.

@@#@
நல்லது. போயிட்டு வாங்க.

@@@@@@@

ரொம்ப நன்றீங்க அய்யா.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Umi = life. Egyptian origin.
Simi = commands peace. Latin, Russian, Polish, African, Spanish, Scottish, Iranian (Persian) Portuguese, Bulgarian, English & Indian origin.

எழுதியவர் : மலர் (22-Sep-19, 5:38 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 73

மேலே