பெண்ணும் சபலமும்

மாநில பொது நூலகத்தில் நான்,
'ஆன்மீக' புத்தகங்கள் வைப்பிடத்தில் ....,
என் கண்களில் பட்டது அந்த புதிய புத்தகம் ,
அழகிய 'புத்தபிரான்' சித்திரம் மேலட்டையுடன் ,
'ஆசையே துன்பங்களுக்கு காரணம்' புத்தனின்
வாக்கு பள்ளியில் படித்தது நினைவுக்கு வர
அந்த புத்தகத்தை கையில் நான் எடுக்க
அதன் பின்னே தெரிந்தது மற்றோர் புத்தகம்,
'புத்தம் புதிய புத்தகம் ' ஒரு அழகு மாதின் உருவில்
சபலத்தில் புத்தி, ...... இப்போது அந்த
'புத்தரின் சரித்திரம் புத்தகத்தை புரட்டிப்பார்க்கவா
இல்லை , புத்தம் புதிய புத்தகமாய்
புன்னகையுடன் காட்சி தரும் அவள்
முகத்தை இன்னும் ஒரு முறை பார்க்கவா....
இப்போது புரிந்தது அன்று தவத்திலிருந்த
விஸ்வாமித்திரன் ஏன் தவம் கலைக்கப்பட்டான்
அவன் எதிரே நடனம் புரிந்தாள் 'மேனகா'...
ஆசை யாரை விட்டது....
என் எதிரே 'அவள்' இல்லை இப்போது
'புத்தரின் சரித்திரம்' புத்தகம் என் கையிலே
இப்போது, சஞ்சலம் தற்போது தீர , புத்தகத்தைப்
புரட்டிப்பார்க்கிறேன் நான்.......
'புத்தம் சரணம் கச்சாமி'
தம்மம் சரணம் கச்சாமி'.....
'ஆசையே அலைபோல நாமெல்லாம்
அதன் மேலே'......

( கவிஞர் கவின் சாரலன் கவிதையைப் பார்த்து ரசித்தேன்
இந்த கவிதை வந்தது...)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Sep-19, 7:29 am)
பார்வை : 87

மேலே