பொன்மதுரை பூமகளே மீன்விழிக் காவியமே

கன்னங் கருங்குழ லில்கதம்பப் பூவனமோ
புன்னகை பூவிதழில் செவ்வானம் தோற்குமே
கன்னத்தில் வைகைச் சுழிபோடும் ஓவியமே
பொன்மதுரை பூமகளே மீன்விழிக் காவியமே
தென்பொதி கைத்தென்ற லாய்எழில் வீசியே
சின்ன இடையசைய தேராய்நீ யும்வருவாய் !
மன்னன் மலயத்துவசன் தோன்றலே மாமதுரை
தென்னவர் பூங்கொடி யே !

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Sep-19, 11:03 am)
பார்வை : 89

மேலே