அவள் அழகு

அன்றலர்ந்த தாமரைப்பூ போல முகம்கொண்டாள்
அவள் ...... அவளை பார்த்த அந்த
சிறுமி கண்ணில் நீர்ப் பெறுக
அம்மா என்று கூறி அழைத்தாள்
தன்னையும் அறியாது அவளை
ஆம் தாய்யிலா அக்குழந்தைக்கு
அழகு மடந்தை தாயாக தெரிந்தாள்
அவள் அன்பிற்கு தாய்ப்பாசத்திற்கு
எங்கும் சிறுமி அவள் ..

நானும் பார்க்கின்றேன் அந்த
அழகு மகளை என் கண்ணிற்கு
அவள் தங்கைக்காக எங்கும் எனக்கு
அன்பு தங்கையாய்த் தெரிகின்றாள்
அவளை பார்த்த நான் தங்கையைப்
பார்த்த திருப்தியில் ....

அதோ அவனும் அவளை நோக்குகின்றான்
காதலிக்காக ஏங்கும் அவன் அவள்
பார்வைக்கு ஏங்கி நிற்கின்றான்
இதோ அவள் பார்வை அவன் மீது
மதியின் கிரணங்களை தன்னொளி பரப்ப
அந்த பார்வையில் அவள் சம்மதம்
கண்டுகொண்டான் , காதலியாய்
இவன் பார்வைக்கு அவளும் வயப்பட்டாள்
பார்வை அவர்களை சேர்த்துவைத்து
இதோ போகிறார்கள் அவ்விருவர்
இன்பலோகம் காண காதல் பறவைகளாய்


பார்க்கப்பட்ட பொருள் ஒன்றே
அது அந்த அழகிய அவள்
பார்ப்பவர் உள்ளங்கள் வேறு
ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் விதமாய்
மகிழ்ச்சி தந்தது அந்த அழகியின் அழகு..
அதுவே அழகின் தனி மகிமை .
'A thing of beauty is joy for ever'
'Beauty is in the beholder's eye'

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (23-Sep-19, 11:20 am)
Tanglish : aval alagu
பார்வை : 1815

மேலே