கதிரவன் பாடல்

வெண் சேலை கிழித்து
மெதுவாகச் சிரித்து
புல் தரையை முத்தமிட்டு.
பனித்துளியை விரட்டி
ஒளிவிட்டமாய் வட்டமிடும்
கதிரவனே வருக வருக நீ
காலையிலே காந்த ஒளியைத் தருக.

அல்லி மலரைக் கிள்ளிப் பார்த்து
மல்லிகை மொட்டைக் குட்டி எழுப்பி
குளிர்ந்த நிலத்துக்கு தீயை மூட்டி
தடாகத்தின் மேல் பள்ளி கொள்ளும்
கதிரவனே வருக வருக உன்
வருகையால் கதிரும் பெருக.

புலர்ந்து விட்டது பொழுதென
சுருண்டு தூங்கும்
மனிதர்களை விரட்டி எழுப்ப வரும்
பகலவனே வருக வருக உன் வரவே
மானிடரின் பொன் உலகாய் மருட.

பச்சை மரத்துக்கு இச்சை கூட்டி
பரந்த கடலுக்கு முத்தம் கொடுத்து
சுரக்கும் வியர்வையைச் சேர்த்தெடுத்து
விண்ணுக்கு அனுப்பும் ஆதவனே
வருக வருக உன் தயவால் பூமியிலே
மழையைத் தருக தருக.

உணவு தேடிப் பறந்த பறவைகளை
கூட்டுக்கு விரட்ட நீ போடும்
வித்தையிலே மேற்க்கு வானம் சிவக்க
அந்தி நேரம் என்று பெயரும் பிறக்க
வருக வருக செங்கோணனே என்
பாட்டுக்கும் நீயும் பொருளாய் வருக.

மஞ்சல் பூசிய முகம் காட்டட
மங்கை அவள் வெட்கம் கொண்டு
கரும் கூந்தலாலே வதனம் மறைப்பது
போல் .

நீயும் வெட்கம் கொண்டு கரு
மேகத்தின் உள்ளே மறைந்து செல்வாயே
அந்த இன்ப அழகை நான் காண
வருக வருக சூரியரே மீண்டும் நீ
நாளை வருக கோடி வணக்கம்
என்னிடம் நீ பெறுக.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (24-Sep-19, 7:56 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kathiravan paadal
பார்வை : 179

மேலே