விளக்கம் தேவையில்லை

சொல்லித்தர வேண்டியதில்லை
எப்படிக் காதல் கொள்வது என்பதற்கு.

வாழ்வதற்கு உள்ள தேவைகள்
அணு உருவுக்குள் உறைந்தேயிருக்கின்றன.

நமக்குள் மொழி அவசியமா என்ன
என் சீண்டலுக்கும், உன் சிணுங்கலுக்கும்.

நிறுத்த வழியில்லை வெடித்துச் சிதறிவிடும்
பருவம் முற்றிய வெள்ளரியினை.

எனக்குத் தெரியவேண்டுமா என்ன,
உன் உளறல், முனகளுக்கான விளக்கம்.


எழுதியவர் : thee (10-Sep-11, 1:13 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 254

மேலே