சைபீரியாவில் அந்தோணி

அந்த ஆஜானுபாகுவான வீடு இருந்த இடத்தை யாருமே பெரிய வெளி என்றுதான் சொல்வார்கள். ஆனால் அது தெரு அல்ல.

உள்ளே நாற்காலியோடு கையை பின்னால் பிணைத்து கட்டிய நிலையில்வாயில் துணியை தைத்த நிலையில் அவன் தலை மடங்கி சரிந்திருந்தான்.

இருட்டு உலர்ந்து கொண்டிருந்தபோது அறை விளக்கின் ஒளி சூரியனாய் வந்தது.

சரசர வென்று ஒரு சோஃபாவை யாரோ கொண்டு வைக்க அதில் அமர்ந்தார் தீர்க்கதரிசி.

ராசு...ரொம்ப மயங்கிட்டான் போல. நேத்து அடிச்சியா?

இல்லைங்க பண்பு. ரொம்ப விசும்பினான் அதான் ரெண்டு தட்டு தட்டினேன்.

எழுப்பி கூட்டிட்டு போய் கழுவி கூட்டிட்டு வா. பாவம் நொந்த பயலாட்டம் இருக்கு.

தீர்க்கதரிசி அறையை விட்டு வெளியில் வந்து சூரியனை பார்த்து கை குவித்து ஏதோ முணுமுணுத்தார். சுற்றிலும் ஆறேழு நபர்கள் இருந்தனர். வெளியில் நின்றிருந்த இறக்குமதி பி எம் டபிள்யு ஒளிர்ந்தது.

தீர்க்கதரிசி அந்த நகரத்தின் பெரும் புள்ளி. சமூக சேவைகளில் அவர் முன்னின்று செயலாற்றுபவர். எந்த அரசியல் வேட்டியும் முன் கைகள் கட்டிக்கொண்டுதான் அவர் முன் நிற்கும்.


பழுத்த முரட்டு மீசைகள் அவர் முன் ஒயிலாய் நெளியும் காட்சிகளும் அதே டிக்கிலோனாக்கள் சட்டசபையில் கர்ஜிப்பதும் பார்க்க ரசமாய் இருக்கும்.

ராசு பின்னால் வந்து நின்றான்.


பண்பு....

திரும்பி பார்த்தார்.

ஆச்சு பண்பு. பிரியாணி கொடுத்தேன்.
சாப்பிட்டான். இப்போ நல்லா இருக்கான்.

தீர்க்கதரிசி மறுபடியும் உள்ளே வந்து குஷனில் அமர்ந்தார்.

இரண்டு ஜோடி கண்களும் ஒன்றையொன்று பார்த்து கொண்டன.

ஒன்று அனுபவம் மிகுந்த அஸ்லான் சிங்கத்தின் சுடும் பார்வை. ஒன்று இளம் சிறுத்தையின் ஆத்திரப்பார்வை.

உன் பேரென்ன?

அந்தோணி.

அப்பா பேரு?

சடையன்.

பொறப்பில் இருந்தே இந்த பேரா? இல்லாட்டி காசு பால் டப்பா கிடைக்கும் னு....

இந்த பேர்தான்.

தீர்க்கதரிசி சில காகிதங்களை அவன் முன்னால் விசிறினார்.

நீதானே இந்த கட்டுரையெல்லாம் வேர்ட்ப்ரஸ் ல எழுதினது.என்னைப்பத்தி.

அந்தோணி இன்னும் நிமிர்ந்தான்.

நிலம் எங்கள் உரிமை என்றான்.

ரப்பென்று அந்த கோட்டை அறை அந்தோணி கன்னத்தில் பாய்ந்த போது ராசு வெலவெலத்து போனான்.

தாயொலி மவனே... எந்த நிலம்டா...? போனாப்போவுதுன்னு கொஞ்சம் சோத்தை போட்டு ரெண்டு எழுத்தை சொல்லி கையை பிடிச்சு தூக்கி விட்டா குடுத்தா மயிரே உரிமை கேப்பியோ?

அந்தோணி கண்கள் ஜொலிக்க  அவரை பார்த்தான்.

                               ***********

அந்தோணியால் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அவன் அப்பா தென்னை மரம் ஏறும் தொழிலாளி. சின்ன குடிசையில்தான் அவன் பிறந்தான். அவனோடு இன்னும் ஏழு பேர் அண்ணன் அக்கா தங்கை என்று பிறந்தபோதும் சடையனுக்கு எந்த கவலையும் இல்லை.

அந்தோணி திணறி திணறி எட்டுக்கு பின் பள்ளி செல்ல மறுத்து ஊர் சுற்ற ஆரம்பித்தான். அது பற்றி யாரும் கவலை தெரிவிக்கவில்லை.

ஊர் சுற்றி சோர்ந்த பொழுதில் சில பாசறைகளுக்குள் சென்று ஒதுங்கினான். அங்கே வெளிநாட்டு புரட்சியாளர் பற்றி  சிலர் சொல்லியும் பேசியும் வந்தனர்.

அந்த நாடுகளின் பெயரும் புரட்சியாளர் பெயரும் அந்தோணியை கவர்ந்தன. ஆனால் அதன் பின் நிற்கும் அரசியல், அவை கடந்து வந்த காட்டுமிராண்டித்தனம், வணிகம், தந்திரம், ஆயுத விற்பனை, தொழில், மத ராணுவம் அவை எதுவும் அடிப்படை கூட அவனுக்கு புரியவில்லை.

தங்கள் சொறி சிரங்குக்கு காரணம் தான் ஒரு கொத்தடிமை. பன்றிக்கறியை விட பசுக்கறியே தன் விடுதலை அடையாளம் என்று சொன்னார்கள்.

சொன்னவர்களை எங்கிருந்தோ சிலர் சொல்ல வைத்தார்கள்.

அவர்களில் மிகப்பலர் எப்போதும் குளிர் கண்ணாடி காருக்குள் உட்கார்ந்து ஸ்வீடிஸ் வோட்கா குடித்து சேட் பணத்தில் புத்தகம் எழுதினார்கள். சினிமா படம் செய்தார்கள். மீட்டிங் போட்டார்கள். கூட்டணி பேசினார்கள். தேவைப்பட்டால் கூட்டி கொடுத்தார்கள்.

அந்தோணிக்கு ஒரு நல்ல மொபைல் போன் மூலம் அரிதான உலக விஷயங்கள் வந்து சேர்ந்தன. என்ன...எல்லாம் எழவெடுத்த இங்கிலீஷில் இருந்தது.

தமிழில் வேண்டுமென்றால் செத்து போன சில அரசியல் ரௌடிகளின் பெயரில்  இயங்கும் விழிப்புணர்வு  தளங்களையும் சில அண்டர்வேர் அணியாத கட்சிகளின் தளங்களையுமே அவனால் நாட முடிந்தது.

அவைகளும் செய்திகளை உறுதியான ஒப்பீட்டு தரவுகளை கொண்டு ஆய்வு செய்து கருத்துக்களை முன் வைக்க துப்பின்றி யூட்யூபில் மேற்கோள் காட்டி இருந்தன.

அங்கும் அந்தோணி பயணித்தான்.

இந்த ஜாதியை அந்த ஜாதியும் அந்த ஜாதியை இந்த ஜாதியும் குதறின. வெறும் பத்து பேர் மட்டுமே செய்யும் இந்த வேலையில் தன்னையும் இணைத்து கொண்டான்.

மணக்க மணக்க கெட்ட வார்த்தைகள் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். தானும் அதில் ஐக்கியமானான்.

ஏகப்பட்ட அக்கா தங்கையோடு பிறந்த அவனுக்கு நடு வீட்டில் அமர்ந்து இப்படி எழுதுவது செம்பகவள்ளியை சைட் அடிக்க ஆரம்பிக்கும்போது மெள்ள உறுத்த ஆரம்பித்தது.

அக்கா தங்கைகள் பற்றி கவலை கொள்ளாத அவன் செம்பகவள்ளி நினைத்து கவலை கொண்டான். பின் அங்கிருந்து அவன் வெளியில் வந்தபோது தூசி அடித்தது போல் உணர்ந்தான்.

செம்பகவள்ளியோடு திருமணம் முடிந்தது.

வேலைக்கு செல்ல வேண்டும்.

கிடைக்கவில்லை.

அவன் ஜாதி தலைவர் ஏன் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்த்தும்போது அவன் ஒரு பிறவி அடிமை என்றார்.

ஒரு சக மனிதன் ஒரு அரசு ஒரு நாடு தன்னை "வீழ்த்தப்பட்டவன்" என்று சான்றிதழ் தரும் போது வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாது அதை கேட்டு கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தது யார் என்று அந்தோணிக்கு கேட்க தோன்றவில்லை.

மாறாக தன்னை ஆயிரமாண்டு அடிமை என்று பிரகடனம் செய்து கொண்டான்.
அதில் கூச்சம் கொள்ள அவனுக்கு எதுவும் இல்லை. ஆனால் பெருமையாக உணர்ந்தான். அப்படி ஆக்கியிருந்தார்கள்.

ஒரு பரிதாபமான ஆட்டை தர தரவென்று இழுத்து கொண்டு காதுகுத்து திருவிழாவில் பெரிய வெடி வைக்கும்போது அது  தவறுதலாக பக்கத்து கடையில் விழ போலீஸ் வந்து காப்பு போட்டு உள்ளே வைத்தது.

அங்குதான் தியாகத்தை சந்தித்தான்.
எங்க சம்பிரதாயம் வெடி வைக்கிறது னு சொல்ல வேண்டியதுதானே என்று தியாகம் எடுத்து கொடுத்தார்.

சம்பிரதாயம். அதுவரையில் அந்தோணி கேட்காத புது வார்த்தை.

அப்படினா என்னங்க?

அதான் அவ்வை சண்முகி படத்தில் கமல் சொல்வானே... உங்க பாஷையில் சம்பிரதாயம் எங்க பாஷையில் மரியாதை னு. அதான் சம்பிரதாயம்.

அந்தோணி குழம்பினான். அது என்ன பாஷை?

தியாகம் விளக்கினார்.

இந்த நாடே நாசமாய் போனதுக்கு காரணம் பாப்பார பயல் என்று ஆரம்பித்து மீண்டும் ஆயிரம் ஆண்டு காலத்துக்கு முன் கூட்டி போனார்.

ஐயன் மட்டும் நல்லா படிச்சான். நம்மளை மாடு மேய்க்க விட்டுட்டான். நல்லா நெய்யை குடிச்சிட்டு நம்மளை சாராயத்துக்கு பழக்கி விட்டுட்டான். இதை இப்படியே உட்டுற கூடாது.

அந்தோணிக்கு குழப்பம் கூடி விட்டது.

முதலில் ஐயர் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சினிமாவில் கூட பஞ்சாயத்து சீனில் பேருக்கு ஒரு ஆள் பூணூல் போட்டுகொண்டு நிற்பான். பேசி முடிவு எடுத்து சொல்வது எல்லாம் கிராப் மண்டைகள் மட்டுமே அந்த விஷம் புடிச்ச பயலுவதான் நம்மளை இப்படி ஆக்கிட்டானுங்க என்று சடையன் ஒருநாள் சொன்னது நினைவுக்கு வந்தது.

தியாகம் குழப்பி விடுகிறார் போலும்.

அந்தோணி மெள்ள கேட்டான். அவன் நெட்டில் படித்து மனதில் உறுத்தி கொண்டிருந்ததை கேட்டான்.

"ஏண்ணே, அந்த காலத்தில் நம்மளை படிக்காம அவிங்க படிச்சு முன்னுக்கு வந்து இன்னிக்கு இப்படி ஆயிட்டோம் னு சொல்றியளே அப்போ எங்கே என்ஜினீயரிங் மெடிக்கல் காலேஜ் இருந்துச்சு. நாலாந்தா னு ஒரு யூனிவெர்சிட்டி. அதுவும் வட இந்தியா. இங்கே இருக்கிறவன் எப்படி அங்கே படிச்சிருப்பான்? கரெஸ்பான்டென்ஸ் கோர்ஸா?

சரி...இங்கே ஆண்ட மன்னன் ஒருத்தன் கூட ஐயர் இல்லையே? அப்பறம் எப்படி நிலமெல்லாம் அவனுக்கு போய் இருக்கும்? சரி, இப்போ விடுதலை வாங்கி எழுவது வருஷம் ஆச்சே. சும்மா வம்பு அளக்காமே அறிவியல் அடிப்படையில் திட்டம் போட்டு ஒழுங்கு செய்தா நம்ம ஆளும் நல்லா படிச்சு போய் இருப்பானே?
ஏன் நடக்கலை? இப்போ நம்ம ஆளுங்களும் நிறைய பேர் பெரும் பதவிக்கு வந்தாச்சு இல்ல. தெரியாம கேக்கறேன் நாம மட்டும் என்ன ஒழுங்கு?"

தியாகம் எதிரியை போல் அந்தோணியை பார்த்தார். இருபது வயதில் இப்படி இருக்க கூடாது இவன். அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்தார்.

அவனை கூட்டிக்கொண்டு சைபீரிய குளிரில் நிறுத்தி ஆரம்பித்தார். இதுதான் புரட்சியின் வித்து. நல்லா பாரு. நீ எப்போ எங்கே நாசமா போனே னு புரியும்.

தியாகம் கம்யூனிசம் கற்று தந்தார். பின் அப்படியே லெனினிசம் மாவோயிஸம் நக்ஸலிசம் என்று குளிக்க வைத்து கரை ஏறியபோது அந்தோணி மீண்டும் பழைய இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

நிலம் எங்கள் உரிமை.

                         *********

வாயை திறந்து பேசுறா என்றார் தீர்க்கதரிசி.

நீ மண்ணின் மைந்தன்னு சொன்னா நாங்க என்ன கடலில் இருந்தா வந்தோம்?
இல்ல வானத்தில் இருந்து குதிச்சோமா?

அந்தோணி ஒரே அறையில் தலை நிற்காது சுழல்வதை உணர்ந்தான். பேச முடியவில்லை.

மூஞ்சை பாரு. நிமிரு.

இந்த கட்டுரை நீதானே எழுதின?

தலையை ஆம்மென்று அசைத்தான்.

தீர்க்கதரிசி என்றோ எதற்கோ யாருக்கோ எழுதிய ஒரு படைப்பு. அதைத்தான் தூசி தட்டி எடுத்து விமரிசனம் என்ற பெயரில் அந்தோணி கிண்டலான மரியாதை தொனிக்க எழுதி இருந்தான்.

வேறு என்ன செய்ய முடியும்? இதுதான் அவனுக்கு எளிது போல் பட்டது.

ஒன்றுக்கு நான்காய் தாய்கிழவிகள் படைகளை வைத்துக்கொண்டு லைக்ஸ் வரும்படி பார்த்து கொண்டால் போதும். அந்த லைக்ஸ் மூலம் யூட்யூபில் ஒரு சேனல் ஆரம்பித்து இதையே வருமானம் ஆக்கி கொண்டு விடலாம் என்று ஜானி சொல்லி இருந்தான்.

தீர்க்கதரிசி இப்படி ரியாக்ட் செய்வாரென்று தெரியாமல் போனது.

பேசுறா என்றார்.

எனக்கு அதில் நீங்க எழுதினது சொன்னது எதுவும் எனக்கு ஏற்பு இல்லை. ஜனநாயக நாட்டில் கேக்க எழுத உரிமை இருக்கு.

இந்த முறை வலப்புறத்தில் ரப்பென்று அடுத்த அறை பாய்ந்தது.

அதுக்கு நேரே என்கிட்ட வந்து விளக்கம் கேக்கணும். நீ அப்போ ....(தன் வாயை அகலமாய் திறந்து கட்டைவிரலை உள்ளே வேகமாய் விட்டு விட்டு எடுத்தார்). பண்ணிட்டு இருந்தியோ...

என் கிட்ட கேட்டா மரியாதை கொடுத்து கேட்டா பதில் கிடைக்கும். உன் மாமியார் முதுகில் எழுதி வச்சு ஊருக்கு காட்டினா நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா...?

பண்பு...

ராசு காதருகில் கூப்பிட்டான்.

மரியநாயகம் வந்திருக்காரு.

கூப்பிடு அவரை.

அவர் திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.

தீர்க்கதரிசி கை குலுக்கி வரவேற்று தன் அருகில் அமர செய்தார்.

அவர் நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்து வருபவர்.

அந்தோணியை பார்த்து கேட்டார். என்னை உன் கைத்தடி மூலமா மனநோயாளி னு எழுதி இருக்க. போட்டும். பரவாயில்ல.

அதில் உன் குமாஸ்தா ஒருத்தன் "நாட்டார் இலக்கியம் மரபு கவிதை" னு வாய்க்கு வந்தது எல்லாம் எழுதி இருக்கான்.

அவன் நேர்மையான ஆள் அப்படினா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனைக்கு நாட்டார் பாடல்தான் பாடணும் னு ஒரு கட்டுரை போடுவானா?

அது அவரவர் விருப்பம் என்றான்.

இப்போது இடப்புறத்தில் ரப் அறை.

நீ கேக்கணும்டா. நாட்டார் வழக்கில் இலக்கணம் இல்லை னு சொன்னப்போ பொத்திட்டு இருந்தே இல்ல..இந்த பேராசிரியர் கிட்டே இப்போ கேளு.

மரியநாயகம் பேச ஆரம்பித்தார்.

நாட்டார் வழக்காற்றியல் என்பதன் ஆரம்பம் சொல்லி அது ஆதி காலத்தில் மனித பண்பாடுகளில் ஊடுருவி நின்று பின் தொழில் ஜாதி நிலங்கள் இசை கலை வாழ்க்கை விளையாட்டு என்றெல்லாம் பரவி வளர்ந்து செழித்து இருந்ததை குறிப்பிட்டார்.

பின்னர் சில புத்தகங்களை எடுத்து வைத்து  Folk lore, Folk loristics, Folk Literature , Folk Song, Folk Art,  Folk Beliefs என்று வகைப்பட்டு இருப்பதை காட்டி பின் அவை சிலோன் மட்டக்களப்பு வரையும் பரவி இருந்ததை சுட்டினார்.

இறுதியாக எந்த வசதியும் அற்ற காலத்தில் இதே வழக்காற்றியல் தன்னை
உளவியல், சமூகவியல்,மொழியியல், மானுடவியல்,மண்ணியல் மற்றும் வரலாறு என்று பல துறைகளில் வளர்ச்சி பெற்றது கூறி முடித்தார்.

இப்போது அந்தோணிக்கு முகத்தில் குத்து விழுந்தது.

இண்டெலெக்ச்சுவல் னா தெரியுமாடா உனக்கு?

தெரியாதுங்க.

எப்படி தெரிஞ்சுப்பே?

கூகிள் பார்த்து.

அடுத்த குத்து அந்தோணி முகத்தில் விழுந்தது.

எது எடுத்தாலும் கூகிள் பிடிச்சு தொங்கினா அப்போ உன் மண்டைக்குள் என்ன இருக்கு? நாளைக்கு அதையும் இழுத்து மூடினா ஆரிய சூழ்ச்சி அதான் இப்படி பண்ணிட்டான் னு சொல்வியா?

அந்தோணிக்கு பதில் சொல்ல தெரியவில்லை. இந்திய மொழிகளில் மிக அற்புதமான படைப்புகள் வெறும் நூல் அளவில் மட்டுமே இருக்கிறது. அவை மின்நூல் வடிவில் வராமல் போவதற்கு காரணம் அவன் தலைவன் கொண்டாடும் அரசியல் என்பதே.

ஆக, நீ வாய்க்கு வந்ததையும் பாயை பிராண்டும் போதும் உன் பொண்டாட்டி சிணுங்கி திரும்பி படுக்கறதையும் எழுதினா அது கவிதை. அதை நாங்க கொண்டாடி கும்புடணும். அது மரபு இலக்கியம். நாங்க எழுதினா அது மேல் குசு விட்டுட்டு போவே. இல்லாட்டி கட்டுரை போடுவே. அப்படித்தானே?

அந்தோணிக்கு அந்த பேராசிரியரை பார்க்கும்போதே கண்களில் ஈ பறந்தது. கண்களில் அன்பும் சமாதானமும் அரும்பி சூரியன் குளித்து முடித்து வந்து உட்கார்ந்தது போல் இருந்தார்.

தீர்க்கதரிசியிடம் இனிமேல் ஜாதி மதம் என்று காகித அம்பு விட்டு ஒன்றும் நடக்காது என்பதை புரிந்து கொண்டான்.

அப்போது தியாகம் ஜெயிலில் கல்லு மேட்டில் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஆனா, தம்பி இந்த எதிர்ப்பு எல்லாம் அடக்கி மொடக்கித்தான் வாசிக்கணும்.
கவுறுமெண்டு ஆஸ்பத்திரி ரேஷன் கடை இங்கெல்லாம் நின்னு பார்த்தா முழுக்க பாவம் அப்பாவி மக்கள் எல்லா சாதி மதத்தில் இருந்தும் வருவாங்க.

அதே சாதி மதத்தில் பெரும் பெரும் பணக்காரன் தொழில் பண்றவகளும் இருப்பாங்க. நாம கூவுறதை மட்டும் கூவிட்டு இருக்கணும்.

நம்ம வீழ்த்தப்பட்டவன் இனத்தில் கூட பெரும் கோடீஸ்வரன் உண்டு. விஷயம் புரிஞ்சு பேசணும். மனசிலாக்கிக்கொ.
ஃப்ரோலேட்டெரியன்ஸ், ப்ருக்கரஸி. அப்படியே காதும் காதும் வச்சு பம்மிடனும்.

அந்தோணி பம்ம ஆரம்பித்தான்.

மன்னிச்சுக்கிடுங்க.

ராசு குனிந்தான். பண்பு விட்ருலாம். இனி நாங்க பாத்துகிடுதோம் என்றான்.

தீர்க்கதரிசி மெல்லிய குரலில்  சில விஷயங்களை கூறினார்.

என்னடா இந்த ஆளு ரொம்ப ஸாஃப்டா எழுதறான். மான் தோலில் உக்காந்து அருள் வாக்கு சொல்வான் னு நினைச்சிட்டு இருந்தியா? இப்போ பாக்கிறே பாரு... அதுதான் உண்மை.

ஏற்கனவே சொல்லிட்டேன்...நான் எழுதற ஆளு இல்லை. என் தொழில் வேற. பிடிச்சா படி. இல்லாட்டி போய்டு.
மரியாதை கொடுத்து கேட்டா அப்படி பதில் வரும். இல்லேன்னா வேற மாதிரி வரும்.

இந்த ஜாதி, மதம், சட்டம்னு டீக்கடை க்ரூப் வச்சு உதார் விடறது, பொம்மனாட்டியை முன்னாடி வச்சு பாலிட்டிக்ஸ் பண்றது, சவுண்டு சரோஜா வச்சு வாயில கிராபிக்ஸ் படம் காட்டறது...இத்தொட எல்லாம் மறந்துறனும்.

நான் உன்னை மட்டுமில்லை யாரையும் ஆழமா படிக்கறது கருத்து சொல்றேன் னு அனத்தறது, இளிக்கறது, ஒப்பாரி வைக்கறது, கூத்தடிக்கறது, கும்மி வைக்கறது, பாவாடை தோக்கிறது  இப்படி ஒண்ணும் பண்ண மாட்டேன்.

என் லெவல் வேற.

நாலு பேரை படிச்சு நாலு பேரை கேட்டு எழுதற ஆசாமி. பேராசிரியரை கேளு தெரியும்.

ஆகாயத்தை பாத்துக்கிட்டே கொட்டையை சொறிஞ்சுக்கிட்டு யாரோ நாலு பேரை மனசில் வச்சுக்கிட்டு அந்த வெண்ணெய்களுக்கு இப்படி எழுதினா புடிக்குமா? அப்படி எழுதினா புடிக்குமா னு யோசிச்சு எழுத மாட்டேன்.

ஒரே தலைப்பை வச்சுக்கிட்டே சாகிற வரைக்கும் நமக்கு வாய்த்த அடிமைகள் நல்லவர்கள் னு அங்கே இங்கே நகர விடாம நிறுத்தி வச்சு அவங்கிட்டயே ஐடியா கேட்டு அதையும் எழுதி மொத்தத்தில் எல்லோரையும் உருப்படாம ஆக்க மாட்டேன்.

ஒரு தொப்புளான் கதை சொல்றேன் கதை சொல்றேன் னு பேசிட்டே இருக்கானே ஒழிய கதை னு வாயவே தொறக்க மாட்டேங்கறான்.

அதுக்கு கீழ ஒரு லம்பாடி வார் பிடிக்கறா...அதை படிக்கும்போதே கொமட்டுது. அவ சொல்லிக்கறா.. என் ஊட்டு பெரச்னை பொறுக்க மாட்டாதைக்கி எழுதறேன். இதுல இந்த எழவெடுத்த தீர்க்கதரிசிக்கு என்னவாம்?

ஏண்டி, நீ இங்கே கொஞ்சறது கொழையறது மாதிரியே வீட்ல உன் புருசனையும் புள்ளையும் மாமனார் மாமியாரை கொஞ்சினா என்னடி பிரச்சனை வரப்போகுது னு கேட்டா அது குத்தமா?

நான் யாருக்கோ என் ஸ்டைலில் ஒரு செய்தி சொல்றேன். அது உனக்கும்  உன்  குமாஸ்தாக்களுக்கும் இல்லை.

உனக்கு கோவிந்தா போடற குரூப் கிட்டேயும் சொல்லிடு. அந்த குரூப் ல ஓர் நபர் என் கூட மணிக்கணக்கா பேசி உங்களை மாதிரி உண்டா அண்ணா னு கொண்டாடிட்டுதான் நேத்து உன்கிட்ட வந்தும் பதிவு போட்டு இருக்கு.

நீங்கள் வீட்டுக்கு வரணும், வீட்டுக்கு கண்டிப்பா வரணும், வீட்டுக்காரர் இருக்கும்போது போன் பண்ணிட்டு வாங்க....

இந்த மீசை இல்லாத பாரதி பெண் விடுதலை பத்தி எழுதும்போது நான் தலையில் தூக்கி வச்சு கொண்டாடனும். இல்ல...தூத்தேறி.

தன் புருஷன்கிட்ட அண்ணன்கிட்டே அப்பாக்கிட்டே இவர் எனக்கு இப்படி பழக்கம். நிறைய புத்தகங்கள் பற்றி சொன்னார். அவரோடு நான் பேசிட்டு இருக்கேன்...

இப்படி சொல்ல வக்கில்லாத தைரியம் இல்லாத ஒருத்தி கமெண்ட் பண்ணினா நாங்க பயந்துருவோம்னு நினைக்கிரியா...

ஏண்டா என் வயசு அனுபவம் தொழில் படிப்பு நான் யாருக்கிட்ட படிச்சு யாரோட இருந்து எப்படி இருக்கரவன் னு உனக்கு தெரியுமா. சோட்டா பயலே நீ எழுதி அது என்னை குத்துமா?

எல்லாத்தையும் சொல்ல முடியாது.

பாத்து பதவிசா இருந்துக்க.

தீர்க்கதரிசி முடித்து கொண்டார்.

ராசு அந்தோணியை நெக்கி எழுப்பினான்.

பேராசிரியர் முன் ராசு அப்படி நடப்பது தீர்க்கதரிசிக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது.

இவனை என்ன பண்ணலாம் சார்?

பையனுக்கு கொஞ்சம் ஞானமிருக்கு தீர்க்கதரிசி. சகவாச தோஷம். நான் கூட்டிட்டு போகவா?

தீர்க்கதரிசி கையை குலுக்கினார்.

பேராசிரியர் தன் புத்தகங்களை எடுத்து எடுக்கும்போது தம்பி இங்கே வா இதை வச்சுக்கோ. இதை படிச்சு பாரு என்றார்.

தகழி எழுதிய தோட்டியின் மகன்.

அவரோடு கிளம்பி தீர்க்கதரிசிக்கு வணக்கம் சொல்லி கிளம்பினான்.



தீர்க்கதரிசி அவன் தோளை தட்டி கொடுத்தார்.

அன்றைய நாளில் அந்தோணிக்கு அது மட்டும் பிடித்திருந்தது.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Sep-19, 12:28 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 123

மேலே