பயங்கரத் தூக்கம்
எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்த
ஒரு நள்ளிரவில்-
எனக்குமட்டும் தூக்கம்
வந்துவிடாமல் இருக்க
சிமிட்டிக் கொண்டிருந்த
இருதயத் துடிப்பு
மௌனமாய் இரவின்
ஜன்னல்களைத் திறந்து விட்டது ;
அண்டவெளியில் இறக்கைகள்
ஏதுமின்றி பறந்து திரிந்தவன் -
"நான்"' என்ற ஆச்சர்யத்தை
மலையில் நின்று ரசித்துக் கொண்டிருந்தேன்...
ஊரெல்லாம் சுனாமியலை;
கால்களுக்கிடையில் கதறி அழும்
பச்சிளம் குழந்தைகள் ..
தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு,
தாய்களைத் தேடும் போது...
எங்கிருந்தோ பி.சுசீலாவின் தேன் குரலில்
"உன்னை ஒன்று கேட்பேன்", என்று
வயிறு புடைத்த ஐஸ்வர்யா
ஓடும் ரயில் கூரையில் நின்றபடி பாடிச் செல்ல...
தொலைக்காட்சிப் பெட்டியில் "ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்!", என்ற
கலைஞரின் கதறல் சப்தம்;
எட்டிப் பார்த்தால் ..
ஜெ ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்டிருந்தார்...
"அப்பாடா!" என்று பூங்காவின் சிமெண்ட்பலகையில் போய் அமர்ந்தேன்
அங்கே அன்ன ஹசாரே தார்ப்பாய்ச்சியோடும்
தலையில் மன்மோகன் சிங் தலைப்பாகையோடும் கழுத்தில் கடிவாங்கிய வடிவேலு, "நாந்தான் கைப்பிள்ளை; சுருக்கமாச் சொன்னா சூப்பர் பிகர் எங்க அக்கா",ன்னார்.
ஓடிச் சென்று
சோப்பு போட்டுக் கழுவினேன்
முகத்துக்கும்தான்.