பஜகோவிந்தம் பக்தி வெண்பா 6 பா 14 15 16
14 .
குடுமிமுடித் தல்மழித்தல் என்றுசிகை ஒப்பனை
காவிஆ டையினில் எத்தனை வேடமடா
கண்டும்கா ணாமூடா இவ்வயிற் றிற்கோசொல்
இத்தனை வேடம் உனக்கு !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !
15 .
வலுபோன அங்கம் பழுத்திட்ட முண்டம்
வரிசைப்பல் லும்போயே பொக்கைவாய் ஆகிய
பின்னும் கிழம்தண்டம் ஏந்தி நடக்குதுபார்
ஏற்கப்பிண் டக்கவ ளம் !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !
16 .
அக்கினிமுன் னேஇவன் ஆதவனோ பின்னே
இரவில் ஒடுங்கிச் சுருள்கிறான்வாழ் கின்றான்
மரநிழலில் ஆயினும் விட்டானில் லைஆசை
கையேந்தி நிற்கின்றா னே !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

