காந்தி கணக்கும் தமிழ் நாடும்

காந்தி கணக்கும் தமிழ் நாடும்

பெரியார் பொருளாளர் காங்கிரசில் ஆக
அறியார் இவர்குணம் மக்கள் -- நறுக்காய்
படையுடன் சென்று கொடைவசூல் செய்தார்
நடையாய் வரும்காந்திக் கென்று

காந்தி வசூல்செலவு காந்திகணக் குத்தானே
காந்தியைப் பார்க்கத் திரண்டனர்--- மாந்தரும்
மக்கள் விலையிலாச்சிற் றுண்டிஈந்தார் அக்கணம்
தக்கதாம் காந்திக் கணக்கும்


காந்தியின்தொண் டர்அவரை வேந்தாய் வரவேற்றார்
காந்தி தமிழ்நாடு வந்தபோது --- பாந்தமாய்
அந்தப் பெரியாரும் இல்லாச் செலவையெல்லாம்
அந்தகணக் கில்காட்டென் றார்

காந்திபேரால் சேர்த்த பணத்தைப் பெரியாரும்
காந்திசிந்த னைநீங்கி வெண்தாடி --- வேந்தர்
இணைத்துப் பிணைத்தார் தனது கணக்கில்
பிணக்கில் புதுக்கட்சி யாம்

காந்திகணக் கைபாப்பான் சாந்தமாய் கேட்கசொன்னார்
காந்திகணக் கில்வரவும் பைத்தும்நேர் ---- சேந்திய
வெண்தாடி கண்டதாம் பாப்பானின் காங்கிரசை
கண்டதும்விட் டாராம் தொடர்பை

விளக்கம்
சுதந்திரம் அடையும் முன் ஒருமுறை காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து நடைப்பயணம்
மேற்கொண்டார்.அந்தசமயம் நம் தமிழ்நாட்டுக் காங்கிரசின் பொருளாளராக ஈ. வெ.
ராமசாமி பதவியிலிருந்தார். இராமசாமி தன் பரிவாரங்களுடன் சென்று பெரும்
பணக்காரர் முதல் ஏழை வரை காந்திவருகை முன்னிட்டு நன்கொடை வசூல் செய்தார்.
மக்கள் சக்திக்கு மீறி அவரிடம் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். மாபெரும்
தொகையாய் அது உருவெடுத்தது.

காந்திக்க்கென வசூலித்தப் பணம் காந்தி கணக்குத்தானே. காந்தியைப்பார்க்க
மக்கள் வெள்ளமெனத்திரண்டது. கட்டுப்படுத்த முடிய வில்லை.ஓட்டலில் சாப்பிட்டவனிடம்
பணம் வசூல் செய்ய முடியவில்லை டீக்கடைக்காரன் முதல்யாரும் எவரிடமும் வசூல் செய்ய
முடியாதபடி திரலானக் கூட்டம். சாபிட்டவனும் பானகம் குடித்தவனும் காந்திக்கணக்கில்
எழுது என்றார்களாம் பாருங்கள். இதில்பலரும் காசுவாங்கமல் உள்ள சிற்றுண்டி களைக்
கொடுத்துள்ளார்கள்.

காந்தி வந்துபோன பிறகு இராமசாமியிடம் காங்கிரசின் தலைவர்களில் சிலர் குறிப்பாக
பார்ப்பனர்கள் வசூல் மற்றும் செலவுக் கணக்கை கேட்டார்கள். இழுத்தடித்து ஒரு
கணக்கை இராமசாமி அவர்களிடம் கேட்டார்களாம். அது ஜெமினி சினிமா சந்திரலேகா
சர்க்கஸ் கம்பெனி கணக்கையும் மிஞ்சி இருந்ததாம். முக்கால்வாசி க்குமெல்
தகிடுதத்தக் கணக்காம். கணக்குக் கெட்டவர்கள் வாயடைத்துப்போனார் கள்.
அந்தப்பண்மெல்லாம் ராமசாமியின் கணக்கில் சேர்ந்தது. இப்படி ராமசாமி அந்நாளில்
காந்தி கணக்கில் மாட்டியவ்ர்தான்.

இப்படி பார்ப்பனத் தலைகள் இவரை கணக்குக் கேட்டு காந்திக் கணக்கு என்று கேலி
செய்தார்கள். விளைவு காங்கிரசில் அதிகமாக பார்ப்பான்தான் இருக்கிறான். அது பாப்பான்
கட்சியென்று காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சியும் பின் தி. க. வையும் ஆரம்பித்து
காந்திக்கு எதிராக கோஷம்பொட்டு சுதந்திரத்தை எதிர்த்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கி.வீரமணி ஒரு ஒளி நாடாவில் பெரியார் மணியம்மை
ஆபீசிலிருந்து வெளிட்டார்.அதில் பெரியாரிடம் எவனும் கணக்கு கேட்க முடியாது. அவர் அந்த
காலத்திலேயே கணக்கு காட்டினார். அதில் எவனாவது பதில் பேசமுடிந்ததா?என்று அவரே
பதிலும் சொல்லியுள்ளார். 75 ஆண்டிற்குமுன் நடத்த சம்பவமிது. வீரமனியும் மறைமுக
மாகச் சொன்னார்.

எழுதியவர் : பழனிராஜன் (1-Oct-19, 5:14 pm)
பார்வை : 115

மேலே