பாதல் மோதல்

டேய் பங்காளி, நீ என்னைவிட ஆறுமாதம் மூத்தவன். உம் பேரு பெரியகாளி. எம் பேரு சின்னக்காளி. ரண்டு பேருக்கும் ஒரு நாள்ல ஒரே மணமேடையில திருமணம் நடந்தது. அக்கா தங்கச்சிய நாம கல்யாணம் பண்ணீட்டோம். உன் மனைவி. மருதாணி. மருதாணி தங்கச்சி செவ்வந்தி என்னோட மனைவி. உன் மனைவிக்குப் போன மாசம் அழகான ஆண் குழந்தை பொறந்தது. நம்ம குடும்ப சோதிடர் கட்டளைப்படி உம் பையனுக்கு 'பாதல்' (Badal)ன்னு பேரு வச்சுட்ட. அந்தப் பேருக்கான அர்த்தம் அந்த சோதிடருக்கும் தெரியாது; உனக்கும் தெரியது. அடுத்த மாசம் நான் தந்தையாகப் போறேன். உம் பையனுக்கு நீ வச்ச பேருக்கு போட்டியா என் பையனுக்கு பேரு வைக்கப்போறேன் பாருடா.
@@@@@@
நீ கிழிச்ச. முடிஞ்சா எம். பையன் பேருல உள்ள கடைசி ரண்டு எழுத்தும் உன் பையன் பேருல வர்ற மாதிரி பேரு வையுடா பாக்கலாம். அதுல நீ செயிச்சா. ஆயிரம் ரூபாய் தர்றேன். தோத்துட்டா நீ
எனக்கு இரண்டாயிரம் தரணும். சம்மதமா?
@@@@@
உன் சவாலை ஏத்துகிறன்டே பங்காளி.
@@@@@@@
(ஒண்ணரை மாதம் சென்றபின்)
டேய் பந்தயம் போட்ட பங்காளி எடுடா ஆயிரம் ரூபாயை.
@@@@@@
உன் மனைவி என் மைத்துணிக்கு ஆண் குழந்தை பிறந்தது உண்மை. என்னுடைய சவால்படி பேரு வச்சுதுக்கு அடையாளமா என்ன சான்று இருக்து? காட்டுடா பாக்கலாம்
@@@@@@
இங்க பாருடா பங்காளி. நகராட்சில இருந்து பெற்ற என் பையனின் பிறப்பு சான்றிதழ்.. உன்னோட மொட்டக் கண்ணை விரிச்சு என் பையனோட பேர படிடா பங்காளி.
@@@@@@
(பங்காளி படிக்கிறார்) 'மோதல்'. என்னடா உம் பையனா பேரு தமிழ்ப் பேரு மாதிரி இருக்குதே.
@@#@@@@@
தமிழ் 'மோதல்' இல்லடா இது..இது இந்தி 'மோதல்'. இந்தப் பேரை சோதிடத்தில் ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கின சோதிடர் முனைவர் ஶ்ரீஶ்ரீஇஷ்டலிங்க சாஸ்திரிகள் வச்ச பேருடா. எடுடா பணத்தை.
@@@@@
பங்காளி நீ செயிச்சுட்ட. வாழ்த்துக்கள்.எங்கிட்ட இப்ப பணம் இல்லை. என் பங்கு ஸ்விஸ் வங்கி பணம் வந்ததும் உனக்குத் தரவேண்டிய ஆயிரம் ரூபாயை நூறு மடங்கா உயர்த்தி ஒரு இலட்சமாத் தர்றேன்.
@@@@@@@@
சரி. உன்னை நம்பறேன்டா பங்கு.
■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●
Badal = cloud
Modal = enjoyment.

எழுதியவர் : மலர் (2-Oct-19, 11:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 87

மேலே