விழியசைவில்

விழியசைவில்
உன் விழி அசைவில்
என் உயிர் அசைத்து போறவளே
இதழ் அசைவில்
சிறு இதழ் அசைவில்
என் உடல் வருத்தி போறவளே

உலக மொழிகளை ஆராய்ந்து
ஒரு காதல் கடிதம் புனைந்திடவா
வார்த்தைகள் விடுமுறை எடுப்பதென்றால்
விழியால் பேசிட பயின்றிடவா

காதல் என்றால் எதுவென்று தேடி
பல காடு மலைகள் அலைந்திருந்தேன்
உன் கரு விழி பார்வை உரசிய நிமிடம்
காதல் இதுவென நான் தெளிந்தேன்

உலக அதிசயம் எங்கெங்கோ இல்லை
என் எதிரில் வாசம் நீ புரிந்தாய்
உதிரம் சூழ்ந்த இதயம் முழுதும்
அன்பே அன்பே நீ கலந்தாய்

நேற்று வரை நான் நானாக இருந்தேன்
எல்லாம் தலைகீழ் ஆக்கிவிட்டாய்
திரும்பிப் பார்க்கும் திசையெல்லாம்
நீயாய்
உந்தன் பிம்பம் மாட்டிவிட்டாய்

ந.சத்யா
(பாடலாசிரியர்)

எழுதியவர் : ந.சத்யா (4-Oct-19, 11:14 am)
சேர்த்தது : சத்யா
பார்வை : 107

மேலே