தாயும் கால்பந்து விளையாட்டும்

உதைத்து உதைத்து
குழந்தை விளையாட்டு

பார்த்து பார்த்து
ரசித்தது தாயின் மனம்


முரட்டு விளையாட்டில்
ஈரைந்து பெறுக்கலில்
சேர்ந்தது ஒன்று
விளையாடியது மொத்தம் பதிணொன்று


மைதானத்து வெயில்
கைக்குட்டை வியர்வையில்
ஒட்டியது குங்குமம்
தாவியது தாயின் மனம்

நினைவில்
தன்னை வயிற்றில் உதைத்தது
கனவில்
இவனை வலியில் உணர்ந்தது

முகத்தில் மகிழ்ச்சி
மொத்தத்தில் வலையில் விழுந்த
பந்தின் எண்ணிக்கை தொடர்ச்சி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Oct-19, 3:15 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 172

மேலே