மரம் - இயற்கை அம்மா

(06/10/2019-மும்பை ஆறி பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதனை கேள்வியுற்று விளைந்த ஆற்றாமை )

மரம் அது வேறும் நாறும்
இலையும் கிளையும் கொண்ட ஜடமா?
வெறும் ஓரறிவு கொண்ட உயி ரா?
அல்ல. நம் உயிர் காக்கும் காற்றும்
நல்ல வழி காட்டும் வாழ்வு ஆதார நீரும்
நிலவளம் காக்கும் மணலும்
நலம் காக்கும் நல்லாசான் தாமே.
ஒன்றல்ல இரண்டல்ல
இரண்டாயிரத்து நூறுக்கும் மேல்
வெட்டப்பட்டது வெறும் மரங்களல்ல.
காற்றின் பிரம்மாக்கள். இயற்கை அம்மாக்கள்
இயற்கையை தொலைத்த பூமி
ஒறுக்கும் சுடுகாட்டிற்கு ஒப்பாம்.
நாட்டை பிடித்த முன்னேற்றமெனும் வெறி
மனித இனத்தை பின்னேற்றும் ஓர் நாள்.
எங்கும் வெறும் கான்கிரீட் காடுகளே விஞ்சும்
வருங்காலம் சந்ததிக்கு வெறும் சுடுகாடுகள் மிஞ்சும்.

எழுதியவர் : D.Krishnamurthy (6-Oct-19, 10:35 pm)
பார்வை : 74

மேலே