அவளின் புன்னகை

அவளின் புன்னகை

அது புன்னகை
அல்ல பொன் நகை

அவள்
சிரிக்கையில் பல்
மட்டும் தெரிவதில்லை
ஆக்ஸ்போர்டு
பல்களைக் கழகம் அல்லவா
தெரிகிறது

மாலை வாடாத சிறு பூ
அவளின் சிரிப்பு

அவள்
அனார்க்கலி
அவளது சிரிப்பழகை
கண்டு களித்த
அனைவரும்
சிறையில்
உண்கின்றனர் களி

சிரிக்கும் போது
அவள் கன்னத்தில்
குழி விழுந்தது
அதை ரசிப்போர்க்கெல்லாம்
கண்ணம்மா பேட்டை
இடுகாட்டில் குழி விழுந்தது

சில்லறை விழுந்தது
அவள் சிரிக்கையில்
எனக்கோ
கல்லறை விழுந்தது
அதை ரசிக்கையில்

கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (7-Oct-19, 8:51 pm)
Tanglish : avalin punnakai
பார்வை : 714

மேலே