காதல் மாளிகை

முதன் முதலாய் உன்னை நான்
கண்டப்பின்னே
என் கனவு தேவதையாய் ஆனாய்
கண்ணே
ஆசையின் ஓசை தன்னை கேட்க
வேணுமுன்னே
திரிகின்றேன் போகுமிடம் எல்லாம் உந்தன்பின்னே
கருணைக்கொண்டு பார்க்க வேணும்
நீயும்என்னே
வந்துநிற்க தயங்குகிறேன் உந்தன்
முன்னே
நீதான் எனக்கானவள் என முடிவு
தெரியும் முன்னே
ஒரு காதல்மாளிகை கட்டிவிட்டேன்
உனக்குன்னே