பஜகோவிந்தம் பக்தி வெண்பா 9 பா 22 23 24

22 .
வீதியில் வீழ்ந்துரு வானகந்தல் மாசாடை
புண்ணிய பாவச்சிந் தைநீக்கி யேதிரிவோன்
யோகியோகத் தில்நிலைப் பான்திளைப் பான்மது
போதையன் ஓர்குழந்தை போல்

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் எனச் சொல்லடா மூடா !


23 .
யாரடாநீ யாரடாநான் யார்அன்னை யார்தந்தை
சாரமற்ற தெல்லாம்நீ ஓர்ந்து தெளிவாய்
விரிந்த பிரபஞ்சம் தேர்ந்தே அறிந்திடு
ஏய்க்கும் வெறும்கன வே !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் எனச் சொல்லடா மூடா !

24 .
உன்னிலும் என்னிலும் இங்கெங்கும் விஷ்ணுவே
வீணேஉன் கோபம் பொறுமைஇன் மையும்
சமநோக்கில் சிந்தித் திடுஅனைத் தும்விரும்பின்
விஷ்ணுத்வம் நீஅடை வாய் !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் எனச் சொல்லடா மூடா !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-19, 4:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே