அவள் அழகு

அவள் அழகிற்கு நிகர் அவளே
அழகே அவளென்றால் அழகு அவளானது
தங்கத்தைப் பிரித்தாலும் தங்கமே மிகும்
இவள் அங்கமும் ஒவ்வொன்றும்
தனித்து நிற்கும் 'அழகு'
இப்படி அங்கம் ஒவ்வொன்றும் காவியம் பாட
என் மனதை கவர்ந்தது
அவள் இதழோரம் தவழும் புன்னகையே
என்னுள்ளத்தை சுண்டி இழுக்கும் அது
அவள் உள்ளத்தை எனக்கு காட்டியது
உள்ளத்தில் கபடில்லை வஞ்சமிலாப்
புன்னகை தந்தது .....அதுவே நான்
கண்ட அவள் அழகில் அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Oct-19, 4:36 pm)
Tanglish : aval alagu
பார்வை : 145

மேலே