ஆசை

உன்னை நனைத்து
பார்க்கும் ஆசை

மழைக்கு

நனைத்து பார்த்த
மழை

உன்னைத் தழுவி

தீராத ஆசையோடு
தரைதொடுகிறது

உன்னை கலைத்து
பார்க்கும் ஆசை

எனக்கு

கலைத்துப் பார்த்து
நான்

உன்னைத் தழுவி

தீராத ஆசையோடு
தரை சாய்கிறேன்

எழுதியவர் : நா.சேகர் (11-Oct-19, 1:18 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aasai
பார்வை : 1723

மேலே