வரவேற்பு

வாருங்கள் வாருங்கள்
அதிபரே

நல்லுறவை தாருங்கள்
தாருங்கள்

நாங்கள் பெற்றிடவே

வரலாறு சொல்லிய
நம் உறவை

கேட்டதுண்டு பார்த்ததில்லை
இன்று

பார்க்கும் பேறுபெற்றோம்

அண்டை நாட்டுடன்

இனி சண்டையில்லை
என்ற

வரலாறை வடித்திடுங்கள்

என்நாடு உன்நாடு
என்ற

உணர்வை உடைத்திடுங்கள்

நம் உலகம் என்று
கை கோர்த்திடுங்கள்

ஒன்றாய் சேர்த்திடுங்கள்

என் கனவை சொல்லிவிட்டேன்

இது நிஜமாகும் நம்புகிறேன்

வாருங்கள் வாருங்கள்
அதிபரே

நல்லுறவை தாருங்கள்
தாருங்கள்

நாங்கள் பெற்றிடவே

எழுதியவர் : நா.சேகர் (11-Oct-19, 2:33 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varaverpu
பார்வை : 390

மேலே