பஞ்சு தேகம் படைத்தவளே

கோபத்தாலே சிவந்தவளே
குங்கும நிறத்துப் பேரழகே
கோடி நிலவுக் கூடியதைப் போல்
கொல்லும் அழகைக் கொண்டவளே

நீலக் கண்கள் பார்வையினால்
நித்தமும் பித்தம் தருபவளே
நெடியக் கூந்தல் உடையவளே
நெகிழும் வாசம் கொண்டவளே

சிவந்த வான உதட்டாளே
சிந்துத் தமிழை உதிர்ப்பவளே
பஞ்சுத் தேகம் படைத்தவளே
நெஞ்சக் கூண்டினுள் நுழைந்துவிட்டாய்

மண்ணில் சொர்க்கம் கண்டேன்டி
மகிழ்ந்து உலகம் மறந்தேன்டி
மாபெரும் சாதனைச் செய்ததைப்போல்
மனதில் பெருமிதம் தோன்றுதடி.
___ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Oct-19, 6:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே