நாடிவந்தளிப்பான் நலம்

வெண்சங்கு மேனியனை வெற்றிதரும் நாயகனைக்
கண்ணாரக் கண்டு களித்தேன்யான்! - தண்டமிழில்
பாடி யுருகிப் பதம்பணிந்தேன் வேழமுகன்
நாடிவந்த ளிப்பான் நலம்.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-19, 11:50 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 23

மேலே