பாரதி வண்ணப் பாடல்

முகத்தில் ஞான வெளிச்ச மேவு
முறுக்கு மீசை பாரதி !
மொழிக்குள் நாத மொலிக்கு மாறு
முழக்கி வீசும் பாநதி !
அகத்து ளாயு மழுக்கை வேரொ(டு)
அகற்று மாவ லோடவன்
அழித்த வாசை அடக்கி யாள
அதிர்த்த லோடு பாடினன் !
சுகத்தை நாடி அவத்தை யோடு
சுறட்டு வோரை ஏசினன் !
சுவைக்கு மாறு கவிக்கு ளோடு
சுழற்றி வாளை வீசினன் !
நெகிழ்ச்சி யாக வடித்த பாவின்
நிறத்தில் வேறு பாடிலை !
நிலத்தில் நேய மிகுத்த மேதை
நினைப்பில் நாளும் வாழியே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-19, 11:58 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 25

மேலே