சுச்சி சச்சி

பெற்ற பிள்ளைகளுக்கு
பிறமொழிப் பெயர் சூட்டி
பெருமிதம் கொள்ளும்
பெற்றோரில நானும் ஒருவன்.

பெற்ற தாயையே
முதியோர் இல்லத்தில்
விடுகின்ற காலத்தில்
தாய்மொழியை யார் மதிப்பார்.

பிள்ளைகளுக்குச் சூட்டும்
பிறமொழிப் பெயர்களே
பெற்றவர்களுக்கு என்றும்
பெருமை தரும் பெயர்கள்.

மனைவிக்கு பிறந்த
இரட்டை பெண் குழந்தைகளுக்கு
தமிழ்ப் பெயர்களைச் சூட்ட
பைத்தியகாரனா நான்?

தேனமுதமாய் இனிக்கும்
இந்திப பெயர்களே
தமிழருக்கு பேரின்பம்
தரும் பெயர்கள்.

தமிழ்ப் பேசி வாழும் எனக்கு
இந்திப் பெயர் மோகம்
எல்லை கடந்தது
என் உள்ளம் நிறைந்தது.

ஒரு பெண் குழந்தைக்கு
'சச்சி' என்ற பெயரைச் சூட்டினேன்
இன்னொரு குழந்தைக்கு
'சுச்சி' என்விருப்பப் பெயரானது.

இப்போது சொல்லுங்கள்
பத்தோடு பதிணொன்றாய்
கூட்டத்தில் கோவிந்தாப போடுவது
எவ்வகையில் தவறாகும?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆■■■■■■◆◆◆◆◆●●●●●●●●●●
Suchi = radiant.
Sachi = truth, grace
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திரைத் தமிழைத் தவிர்ப்போம். தமிழ் உணர்வை வளர்ப்போம்.

எழுதியவர் : மலர் (13-Oct-19, 11:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 71

மேலே