அலையும் மனது

விழிஅம்பால் கணை கூட்டி
விஷம் வைத்து எய்தாயடி
பூனைவாய்ப் பட்ட எலியாக
என்னை வைத்துச் செய்தாயடி
கண்மூடித் துயில் கொண்டேன்
கனவிலும் உன் முகம் தான்
கண் விழித்து எழுந்தாலே
காண்பதெலாம் உன் விம்பம்
சுகமான சுமை தந்த
சுட்டுவிழி ஓவியமே
வெறித்தனம் கொண்டு உன்னை
விழுங்கி விடப் பார்க்குதடி
அனுதினமும் உன் நினைவால்
அலைகின்ற என் மனது

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (13-Oct-19, 12:11 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 312

மேலே