கனாக் கண்டேனடி தோழி

(#விருதுக்கான #தேர்வு
***************************

நடு ராத்திரித் தூக்கத்திலே./
நெடும் தூரக் கனவு ஒன்று./
நான் கண்டேனடி சினேகிதியே தேவி/
அக் கதையைக் கூறட்டுமா? என் தோழி./

தென்னங்கீற்று மெல்லிசை அமைத்திட./
தென்றலது கூந்தலைக் கலைத்திட./
அவரோடு கடற்கரை ஓரத்திலே அமர்ந்திட /
ஓர் கனாக் கண்டேனடி தோழி./

இளரத்தம் சூடாகி நரம்போடு
புடைத்திட./
புதுவித உணர்வு அவருக்குள்ளே நுழைந்திட./
அவர் எனது செவ்விதழ்களிலே புதுக் கவிதை படித்திட/
கன்னத்திலே முத்தமிட்டு மீசையினாலே கோலமிட./
நானோர்க் கனாக் கண்டேனடி தோழி ./

பொன் மேனியிலே மச்சங்கள் எண்ணிட./
என் உடலது வீணையெனத் தொட்டிட./
விரல்கள் முடி முதல் பாதம் .
வரை மீட்டிடக் கனாக் கண்டேனடி தோழி. /

கனவிலே இன்பம் துளிர் விட./
என்னை மறந்து மெதுவாக புரண்டிட./
மூடிய இமையிரண்டும் தானாகத் திறந்திட./
கண்டவை கனவென்று நெஞ்சம் அறிந்திட./
முதிர்க்கன்னியான என் மனமோ நொந்திட/
விழிகளும் கண்ணீரைச் சொரிந்ததடி தோழி.

(எனது கவிதையை தேர்வு செய்து
விருதுக்காக பரிந்துரை செய்த
நடுவர் ஐயா அவர்களுக்கு குழும
நிருவாகத்திற்கும் நன்றிகள்) ❤🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (13-Oct-19, 12:44 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 184

மேலே