பஜகோவிந்தம் பக்தி வெண்பா 12 பா 31 32 33

31.
குருபாதத் தாமரை சேர்ந்த உயர்பக்தா
சம்சாரம் நீவிட்டு முக்தி அடைவாய்
புலனை மனதை முறையில் அடக்கிடினே
உன்னையுன் நெஞ்சிலேகாண் பாய் !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

32.
திண்ணமாய்இவ் வண்ணம் இலக்கண நல்விதியில்
பாடம்கற் றிட்டஸ்ரீ சங்கரர் சீடரும்
பெற்றார் விவேகத் தினை !

33.
பிறவிப் பெருங்கடல் நீந்த இறைவன்
பெயரின்றி வேறில்லை யே !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

----------------- பஜகோவிந்தம் முற்றும்----------------

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-19, 4:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே