நிழல், நிஜம்

பகலின் உச்சி வேளை
நான் , என் நிழல் என்னைத் தொடர
எங்கிருந்தோ வந்து சேர்ந்த
ஒரு சிறு மேகக்கூட்டம் மழைத்தர
நான் நனைந்தேன் .....
நிழல் காணாமல் போனது நனையாது
அது நிஜம் அல்ல வெறும் நிழலே
வாழ்க்கையில் உண்மையும் பொய்யும் போல

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (13-Oct-19, 9:00 pm)
பார்வை : 137

மேலே