முரண்

தலை நிமிர்ந்து
செல் என்பார் - பின்னே
வணங்காமுடி என்பார்...

படிப்பறிவு வாழ்வில்
முக்கியம் என்பார் - பின்னே
படித்ததிமிர் என்பார்...

விருப்பம் எதுவோ
செய் என்பார் - பின்னே
அடங்காபிடாரி என்பார்...

பேசுவதில் பயம்
எதற்கு என்பார் - பின்னே
வாய்கொழுப்பு என்பார்...

ஆணுக்கு பெண்
சமம் என்பார் - பின்னே
சமையல் எங்கே என்பார்...

முன்னேறி செல்
வாழ்வில் என்பார் - பின்னே
தான்தோன்றி என்பார்...

ஆண்கள் நட்பில்
தவறில்லை என்பார் - பின்னே
நடத்தை தவறு என்பார்...

மனதின் அழகே
பெரிது என்பார் - பின்னே
உடல்பருமன் என்பார்...

அன்பே பெரிது
உலகில் என்பார் - பின்னே
பணமெங்கே என்பார்....

எல்லாம் நமது
ஆகும் என்பார் - பின்னே
என்னுடையது என்பார்...

மனிதனின் மனமே
முரண்களின் மூலாதாரம்...

எழுதியவர் : ரூபி (13-Oct-19, 9:37 pm)
சேர்த்தது : ரூபி
Tanglish : muran
பார்வை : 97

மேலே