அன்பு

சீற்றம் நம்பிக்கையின்மை கண்களை மறைக்க
குறைகள் கண்டதும் சட்டென பாசம் கசக்கின்றது
இரத்த பந்தத்தில்;

தோழமைகளிடம் சுயநலம் தலைதூக்க
வெந்த புண்ணில் வேல் பாய
கற்புதனை நட்பில் காக்க
நட்புறவில் நிறைவை தேடுகின்றது
இதயம் ஒரு முடிவிலித் பயணத்தில்;

கசக்கின்ற ஒளடதமாம் பாசத்தை
மீள்பரிசீலனை செய்யும் புத்தி
நட்புறவுகளை பாச பந்தத்தில் காண
நட்பு அனாதையாகவில்லை அன்பு தேசத்தில்.

எழுதியவர் : niyathy (14-Oct-19, 12:17 am)
Tanglish : anbu
பார்வை : 496

மேலே