பருவம் எய்தல் கூட

சாலையில் வாகனங்கள் சாரை சாரையாய்
ஆகாயத்திலும் அது போலவே ஊர்திகள்
எல்லோர் கையில் இயந்திரமே வழிகாட்டியாய்
ஏழையும் கோழையும் இதில் சரிசமமாய்

இயல்பான சர்க்கரை நோயாய் பயமுறுத்த
எல்லா உணவிலும் கலப்பிடம் மேலோங்க
பாலுங்கூட பாலுறுப்பை சிதைக்கும் நஞ்சாய்
உணவையே உண்ணாதே என மருத்துவன் கூற

நோயைத் தீர்க்கும் மருந்துங்கூட பக்க விளைவை
பலவாறு உருவாக்கி பாதகத்தைக் கொடுக்க
பருவம் எய்தல் கூட அஞ்சுதலை உருவாக்க
பரந்த உலகில் பயமின்றி வாழ்வது எங்ஙனம்

உடல் தோல் எலும்பு குருதி உயிர் இவைகளை விட
பணம் பொருள் சொத்து ஆசை பேராசை என்பன
பழிக்கஞ்சா மனித அறிவில் புகுந்து பாழ்படுத்த
இருப்போர் இறந்தபின் இவை யாரிடம் செல்லுபடியாகும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Oct-19, 7:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 49

மேலே