எனக்கு நீ உண்டு

புல்லுக்கு பூ உண்டு
நெல்லுக்கு உமி உண்டு
எனக்கு நீ உண்டு
உனக்கு நான் உண்டு
நம்மை பிரிப்பதற்குதான்
எத்தனையோ - நபர் உண்டு !

நதியை பிரிப்பது கரை
நம்மை பிரிப்பது விதி

நதி வழியே சென்றால்
இன்பக் கடலுண்டு
விதி வழியே சென்றால்
இங்கே யாருண்டு - சொல்?!

எழுதியவர் : கிச்சாபாரதி (15-Oct-19, 7:27 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : enakku nee undu
பார்வை : 413

மேலே