காசு என்ற மாயாவி

மாயங்கள் உருவாகி நல்ல
மானுடம் மாற வேண்டும்
மருந்தில்லா முறையிலே
மகசூல்கள் பெறுக வேண்டும்
காமத்தின் வேகமது
கட்டுக்குள் இருத்தல் வேண்டும்
காசு என்ற மாயாவி
காணாமலே போக வேண்டும்
ஆபத்தான வியாபாரம்
அறவே ஒழிய வேண்டும்
ஆடம்பர விழாக்கள்
அருகி குறைய வேண்டும்
பம்மாத்து அரசியல்கள்
பலமிழந்து போக வேண்டும்
பாடுபடும் அனைவராலும்
பல்லுயிர் உலகம் உயர வேண்டும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Oct-19, 8:29 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 42

மேலே