வண்ணச் சிறகு விரித்த ஒரு சின்ன ஏஞ்சல் போல்

அவள் விரல் நுனியில்
ஒரு பட்டாம் பூச்சி வந்தமர்ந்தது
தன் செவ்விதழால் செல்லமாய்
அதன் சிறகை அவள் முத்தமிட்டாள்
விரலில் ஏந்தி தோட்டத்தில் விட்டிட
எடுத்து சென்றாள்
தேன் அருந்திட மலரை நோக்கி
அது பறக்கவில்லை
அவள் விரலிலே அமர்ந்திருந்தது
வண்ணச் சிறகு விரித்த
ஒரு சின்ன ஏஞ்சல் போல் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-19, 4:15 pm)
பார்வை : 186

மேலே