இயற்கை

அந்த தேன் சிந்தும் மலரை நாடி
வந்து சேர்ந்தன ஒரு வண்டும்
மற்றும் ஒரு வண்ணத்துப் பூச்சியும்
முட்ட முட்ட தேன் உறுஞ்சி வண்டு
பூச்செடியில் மயங்கி இருக்க
சிறுதே தேன் உண்டு மகிழ்ந்த
வண்ணத்துப்பூச்சி பூவிற்கு
நன்றி சொல்வதுபோல மெல்ல
பூவின்மேல் சிறகடித்து பறந்து சென்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Oct-19, 5:08 pm)
Tanglish : iyarkai
பார்வை : 433

மேலே