இயற்கை-மனிதன்

தீயைக் கண்டறிந்த மனிதன்
தீயால் நல்லுணவு செய்து உண்டாலும்
தீயால் தன்னையே மாய்த்துக்கொள்கின்றான்
தீக்கிரையாக்கிறான் வேண்டா மனிதரை
பச்சை மரங்களடர்ந்த கானகத்தை தீயால்
அழித்து தீயோனாகிறான் ....நன்மைக்கே இயற்கை
அளித்த தீயை இயற்கை மீதே ஏவிவிடுகிறானே
தீது செய்யாது வாழ கற்றுக்கொள்வானா இவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Oct-19, 5:17 pm)
பார்வை : 185

மேலே