கூட்டுக் குடும்பம்

நாலு கிலோ மிச்சர் வாங்கி
நண்டு சிண்டு தின்னபிறகும்
யாருக்காவது குடுக்காம இருந்துருப்போம் - அப்ப

இப்ப ஒத்தையா பீசா வாங்கி
குடும்பமா தின்னாலும் - கொஞ்சம்
மீந்துதான் போகுதய்யா
பிரிட்ஜில வைக்க

புருஷன் கூட இருக்குறதயே
கூட்டுக்குடும்பமா நினைக்கிறாக
ஓத்தபுள்ள வளக்குறதயே
ரொம்ப பாரமாத்தான் நினைக்குறாக

ஆளுக்கு அம்புட்டு படிச்சாளும்
புள்ளைக படிக்கிறதென்னவோ டியூஷன்லதான்
ஆளாளுக்கு உழைச்சாலும் குடும்பம்
சேருரது பேமிலி தோசையிலதான்

பீரோ கொத்துச்சாவியக்கூட
ஹாயா கூட கொண்டு போவாக -ஆனா
பெத்த பிள்ளைகள மட்டும்
ஆயா கூடவே விட்டுறுவாக

தனியா மேனேஜ் பண்ணனுமாம்
டீனேஜ் புள்ளய சேர்ப்பான் ஹாஸ்டலுல
அப்புறம் எப்படியா கூடவைப்பான்
ஓல்டேஜ்ல

கூட நுhறு செலவானாலும் கூட்டு;க்குடும்பம்தான் பெஸ்ட்
அது குடுக்குற இன்பம்தான் டேஸ்ட்

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (16-Oct-19, 7:09 pm)
பார்வை : 136

மேலே