கதறி அழும் சில இரவுகள் 555

என்னுயிரே...

உள்ளங்கையோடு சேர்ந்திருக்கும்
ரேகையைப்போல...

நீயும் நானும் சேர்ந்தே
இருப்போமென்றாய்...

விரலில் மீறிய நகம் போல
என்னை வெட்டி எறிந்துவிட்டாய்...

தனிமையில் நான் தவிப்பேன்
என தெரிந்திருந்தால்...

நான் அப்போதே உன்னையும்
உன் காதலையும் மறந்திருப்பேன்...

குண்டூசி விழுந்தாலே
சப்தம்கேட்கும் இரவில்...

கதறி அழுதிருக்கிறேன் என்
தலையணையில் மூச்சடக்கி...

தனிமையில் தவிக்கிறேன்
உன்னை தினம் தினம்...

என் வாழ்வில் உன்னை
நினைத்ததால் என்னுயிரே...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Oct-19, 3:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 942

மேலே