இனியவளே

இனியவளே 🌹

வானத்தில் இருந்து இறங்கி வந்த குளிர் நிலவே

தென்றலாக வந்து உன்னை தழுவவா

வண்ணமலரே வண்டாக வந்து தேன் எடுக்கவா

கருமேகம் கூந்தலில் வந்து பூச்சூடவா

மயக்கும் கண்களில் வந்து மை தீட்டவா

மாதுளம் உதடு தேன் சிந்தும் இதழில் வந்து தேன் குடிக்கவா

சின்ன இடையில் இன்ப சுரங்கத்தில் வந்து புதையல் எடுக்கவா

மின்னல் கீற்றே காதல் மழையே வந்து கவி பல பாடவா

அழகிய வீனையே ஆனந்த பைரவி வந்து மீட்டவா

இன்ப உலகமே இதயகனியே வந்து உன் உயிரில் கலக்கவா.

- பாலு.

எழுதியவர் : பாலு (17-Oct-19, 7:37 pm)
சேர்த்தது : balu
Tanglish : iniyavalae
பார்வை : 383

மேலே