அவளழகு

என்ன ஒரு அற்புதம் உன்னழகு,
உன்னைப் படைத்த பிரம்மனும்
உன்னைக்கண்டு வியப்பான்,
இன்னும் ஒருத்தியை இப்படி இனிமேல்
படைத்திடவும் முடியுமா என்னாலும்,
அதனால் பெண்ணே உனக்கு
சாகா வரம் தந்திட நான்முகனும்
மாலவனை வேண்டி நிற்பானோ ......
அப்படிதான் என்று
நினைக்கத்தோன்றுகிறது எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Oct-19, 3:53 pm)
பார்வை : 332

மேலே