நான் அவள்...

மழை வரும் பொழுதெல்லாம்
குடை தேடும் நமக்கு மத்தியில்
அவள் மட்டும் குடை வரைந்து கொண்டிருப்பாள்
ஒவ்வொரு முறையும் மழை வரும்
ஒவ்வொரு முறையும் குடை வரைவாள்
மழைக்கு பிடிப்பாள்
குடையும் நனையும்
மழையும் நனையும்
அவளும் நனைவாள்
என்னமோ அவளுக்கு மட்டும் தான்
இப்படி ஒவ்வொரு முறையும் நடக்கிறது
என்னவென எட்டிப்பார்த்ததில்
அவளுடைய வீடு
பாதி கூரையினால்
மீதி வானத்தினால் பின்னியிருந்தது..

எழுதியவர் : சேகுவேரா சுகன்.. (19-Oct-19, 2:04 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : naan aval
பார்வை : 58

மேலே