அன்பே சிவம்

அன்பே சிவம் 🙏🙏

விதி செய்த சதி
விதியின் விளிம்பில் அவன்
மனிதர்களால் இன்றளவும் சகித்துகொள்ள இயலாத வியாதியுடன் திருக்கோயிலின் கோபுர வாசலில்
பிச்சைகாரனாய் அவன்
அன்று பார்த்து அவனை
போலவே உள்ள அவன்
திருவோட்டில் நயா பைசா கூட விழவில்லை
ஏற்கனவே மங்கிய பார்வை
அதீத பசியால் கண்கள் இரண்டும் இருட்டியது
யாரோ ஒரு புண்ணியவான்
உணவு பொட்டலம் ஒன்றை அவனை பார்த்து வீச
ஆற்பறித்து அதை எடுத்து
ஆர்மவமாய் பொட்டலத்தை பிரித்து
வாயில் தினிக்கும் சமயம்
நான்கு தெரு நாய்கள் வாலாட்டி அவனை படை சூழ
தான் பெற்ற இன்பம் வையகம் அனைத்தும் பெற
தான் உண்ட அந்த அமிர்தத்தை ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருனையுடன் பறிமாறினான்
இதன்வூடே இன்னொரு ஆறு அறிவும் அவனிடம் கையேந்த
மீதி இருந்த உணவை அந்த நபரிடம் கொடுத்தான்.
உணவை வாங்கிய நபர்
நான் யார் என்று தெரிகிறதா என்று கேட்க
எனக்கும் வேலை வெட்டி கிடையாது
உனக்கும் ஏறகுறைய என் நிலைமை தான்
முதலில் சாப்பிடு
பின் என்னிடம் கேள்வி கேள்
அவன் கட்டளைக்கு உட்பட்டு பிச்சைகாரனிடம் பிச்சை எடுத்தவன் சாப்பிட்டான்
இப்போது சொல் நான் யார் என்று?
நீ.... நீ இந்த கோயிலின் உள்ளே மூலஸ்தானத்தில் அழகாக வீற்றிருக்கும் ஈசன்.
பரம்பொருள்.
ஆடிப்போன பரமேஸ்வரன்.
எப்படி என்னை கண்டுபிடித்தாய்
சொந்தம், பந்தம் எல்லோரும் என்னை எட்டி உதைத்து தெருவில் தள்ளினர்.
எனக்கு பிச்சை போடும் தர்மவான்களும் கூட நாலு அடி தள்ளி நின்றே பிச்சை போடுவர்.
நீர் மட்டுமே என் அழுகிய நிலையில் உள்ள கரங்களால் வழங்கிய உணவை ஆசையாக பெற்று ஆனந்தமாக உண்டீர்.
ஈசனே, உன்னை தவிர வேறு யார் இந்த செயலை செய்ய கூடும்.
ஈசன் மீண்டும் அவன் கரம் பற்ற
அவனிடம் இருந்து வியாதி முற்றிலும் விடைபெற்று, புது பொலிவுடன் காணப்பட்டான்.
என் இறுதி வாழ்நாட்களை எண்ணி கொண்டிருந்த என்னிடம் ஏன் இந்த கருனை.
மானுடா, நீ உன்னுடைய இந்த நிலையிலும் உனக்கு கிடைத்த உணவை, நான்கு ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பகிர்ந்து உன்னும் உன் உயர்ந்த மனது கருனையின் உச்சம்.
ஆகவே யாம் உமக்கு வாழ்வு அளித்தோம்.
ஈசனே, கருனையின் வடிவமே,
பரம்பொருளே, எனை காத்த ஈஸ்வரனே!
உம்மை வணங்குகிறேன். அடிபணிகிறேன்.
ஓம் நமசிவாயம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (19-Oct-19, 4:13 pm)
பார்வை : 150

மேலே