காதல் - பிரிவு

தன்னை விட்டுப்போன
ஆண் குயில் மீண்டும் வந்திட
வேண்டி பெண் குயில் ஓயாமல்
கூவிக்கொண்டே இருக்க
வாயிலிருந்து ரத்தம் கக்கியது
கூவல் நின்றது .....
போன ஆண் குயில் மீண்டும் வந்தது
பாவம் பெண் குயில் சலனமில்லாது
இருக்க , அதை எழுப்பிட கூவி பார்த்தது
ஆணும், மீளா தூக்கத்தில் பெண் குயில்
யாரைக் குற்றம் சொல்ல .... !!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 1:59 pm)
பார்வை : 138

மேலே